முதலிடத்தைப் பறிகொடுத்த பார்சிலோனா

முதலிடத்தைப் பறிகொடுத்த பார்சிலோனா

2 mins read

வெலன்சியா: ஸ்பானிய காற்பந்து லீக்கின் நடப்பு வெற்றியாளரான பார்சிலோனா குழு இந்தப் பருவத்தில் சோபிக்கத் தடுமாறி வருகிறது. கடைசியாக விளையாடிய நான்கு ஆட்டங்களில் ஒன்றில்கூட வெல்லாததால் புள்ளிப் பட்டியலில் பார்சிலோனா முதலிடத்தை இழக்க நேரிட்டது. வெலன்சியா குழுவிற்கெதிராக நேற்றைய ஆட்டத்திலும் அக்குழு வின் வெற்றி ஏக்கம் தொடர்ந்தது. ஆட்டத்தின் இரண்டாம் நிமிடத் திலேயே கோல் போட்டு வெலன் சியாவிற்கு முன்னிலை பெற்றுத் தந்தார் அர்ஜெண்டினாவின் எஸக்கியல் கராய். அதன்பிறகும் பார்சிலோனா வீரர்கள் தற்காப்பில் சோடைபோக, வெலன்சியாவிற்குப் பல கோல் வாய்ப்புகள் கிட்டின. ஆனாலும், வெலன்சியா குழு வினர் அவற்றைக் கைக்கொள்ளத் தவறினர்.

இந்த நிலையில், 23வது நிமி டத்தில் பார்சிலோனா குழுத் தலைவரான லயனல் மெஸ்ஸி போட்ட அற்புதமான கோல் ஆட் டத்தை 1=1 எனச் சமனுக்குக் கொண்டு வந்தது. இதனுடன் சேர்த்து இந்தப் பருவத்தில் பார்சி லோனாவிற்காக இதுவரை 11 கோல் களை அடித்துள்ளார் மெஸ்ஸி. "இந்தப் பருவத்தில் கிட்டத் தட்ட எல்லா ஆட்டங்களிலும் நாங் கள் எதிர்நீச்சல் போட்டே மீண்டு வரவேண்டியிருந்தது. ஆயினும், இந்நிலை விரைவில் மாறும் என் பதை அறிந்துள்ளோம்," என்றார் பார்சிலோனா நிர்வாகி எர்னஸ்டோ வல்வெர்டே.

இன்னோர் ஆட்டத்தில் செல்ட்டா வீகோவை 2=1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்த செவிய்யா குழு 16 புள்ளிகளுடன் பட்டியலின் முதலிடத்திற்கு முன் னேறியது. தரப்புக்கு 15 புள்ளி களைப் பெற்றுள்ள பார்சிலோனா வும் அட்லெட்டிகோ மட்ரிட்டும் அடுத்த இரு இடங்களில் உள்ளன. ரியால் மட்ரிட் 14 புள்ளிகளுடன் நான்காம் நிலையில் இருக்கிறது.