இளையர் ஒலிம்பிக்கில் தாய்லாந்து 'குகை' சிறுவர்கள்

1 mins read
863082ab-0fec-441e-9ca2-6b08ef7824d0
-

இவ்வாண்டு ஜூன் மாதம் இரு வாரங்களுக்கு மேலாக குகைக்குள் சிக்கிக்கொண்டு, பெருமுயற்சிக்குப் பின் மீட்கப்பட்ட தாய்லாந்தைச் சேர்ந்த இளம் காற்பந்துக் குழுவிற்கு அர்ஜெண்டினாவின் பியூனஸ் அய்ரசில் நடக்கும் இளையர் ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும்படி சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்டு அங்கு சென்ற அக்குழுவினர், முன்னணி அர்ஜெண்டினா குழுவான 'ரிவர் பிளேட்'டின் இளம் குழுவுடன் நட்புமுறை ஆட்டம் ஒன்றில் விளையாடினர். இந்த ஆட்டம் 3=3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. (படத்தில்) 11 முதல் 16 வயது சிறுவர்களைக் கொண்ட தாய்லாந்தின் 'வைல்டு போர்ஸ்' காற்பந்துக் குழுவின் பயிற்றுவிப்பாளரும் தலைவருமான இக்கபோல் ஜந்தவோங்கிடம் நினைவுப் பரிசை வழங்குகிறார் ரிவர் பிளேட் குழுவின் தலைவர் ரொனோல்கோ டோனஃபிரியோ. படம்: ராய்ட்டர்ஸ்