லண்டன்: லிவர்பூல் காற்பந்துக் குழுவின் ஆன்ஃபீல்ட் விளையாட் டரங்கில் இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டமொன்றில் அக்குழுவை வெற்றிகொள்ள வேண்டும் என்ற மான்செஸ்டர் சிட்டி குழுவின் ஏக்கம் கடந்த 15 ஆண்டுகளாகத் தீர்ந்தபாடில்லை. நேற்று முன்தினம் பின்னிரவு நடந்த ஆட்டத்தில் அந்தச் சோகத் தைப் போக்க அருமையான வாய்ப்பு கிடைத்தபோதும் மேன் சிட்டியின் ரியாத் மாரெஸ் அதை வீணாக்கிவிட்டார். இப்பருவத்தின் தொடக்கத்தில் 60 மில்லியன் பவுண்டு விலைக்கு லெஸ்டர் சிட்டி குழுவிலிருந்து மேன்சிட்டிக்கு மாறிய மாரெஸ் 85வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் பந்தை கோல் கம்பத்திற்கு மேலே அடித்து அதிர்ச்சியளித்தார்.
ஆயினும் அவர் கோலடிக்காதது லிவர்பூல் குழுவிற்குப் பெரும் நிம்மதி தருவதாக அமைந்தது. மேன்சிட்டியுடனான ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலை கண்டதால் இந்தப் பருவத்தில் இதுவரை தோல்வியே காணாத குழுக்களில் ஒன்றாக லிவர்பூல் நீடிக்கிறது. மேன்சிட்டி, செல்சி ஆகிய குழுக் களும் லிவர்பூலைப் போலவே இதுவரை ஓர் ஆட்டத்தில்கூட தோற்காமல் தலா 20 புள்ளிகளைப் பெற்றுள்ளன. இருப்பினும் கோல் வித்தியாசத்தில் முன்னிலை பெற் றதால் மேன்சிட்டி முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டது. செல்சி இரண்டாமிடத்திலும் லிவர்பூல் மூன்றாமிடத்திலும் உள்ளன.
பெனால்டியைக் கோட்டைவிட்ட ரியாத் மாரெசுக்கு (இடது) ஆறுதல் கூறும் மேன்சிட்டி நிர்வாகி கார்டியோலா. படம்: ராய்ட்டர்ஸ்

