ரோகித்: நிரந்தர அணித்தலைவராக பொறுப்பேற்கத் தயார்

ரோகித்: நிரந்தர அணித்தலைவராக பொறுப்பேற்கத் தயார்

1 mins read

ஆசியக் கிண்ணத் தொடர் முழுவதும் தாங்கள் சிறப்பாக விளையாடியதாகவும் தங்களின் கடும் உழைப்பிற்குத் தக்க பரிசு கிடைத்துள்ளதாகவும் இந்திய அணியின் தற்காலிகத் தலைவராகச் செயல்பட்ட ரோகித் சர்மா கூறியுள்ளார். "முழுமையான செயல்பாட்டை வழங்கி னோம். தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்தியதால் கிண்ணம் எங்களின் கைக்கு வந்தது. இறுதிப் போட்டி போன்று, இதற்குமுன்னும் பரபரப்பான பல போட்டி களில் ஆடியுள்ளோம். ஒரு சில நாட்களில் இப்படி அமைந்துவிடுவது வழக்கம்தான்," என்று ரோகித் சொன்னார்.

வாய்ப்பு வரும்போது நிரந்தரமாக அணித் தலைவர் பொறுப்பை ஏற்கத் தான் தயார் என்றும் அவர் கூறியுள்ளார். "தற்காலிகத் தலைவராகச் செயல்பட்ட போது பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. இருந்தாலும், வாய்ப்பு வரும்போது நிரந்தரமாக அப்பொறுப்பை ஏற்க நான் தயாராக இருப்பேன்," என்றார் அவர். முன்னாள் தலைவர் டோனி ஒருபோதும் பதற்றமாக இருந்ததைக் கண்டதில்லை என்ற அவர், தானும் அவரைப் போலத் தான் என்றும் சொன்னார்.