லண்டன்: சர் அலெக்ஸ் ஃபெர்குசன் நிர்வாகியாக இருந்த போது மற்ற இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுக்களுக்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த மான்செஸ்டர் யுனைடெட், அவர் விடைபெற்ற பிறகு மீண்டும் முதல்நிலைக்குத் திரும்புவது எப்படி என்பதற்கு விடை தெரி யாமல் தவித்து வருகிறது. டேவிட் மோயஸ், லூயி வேன் ஹால், தற்போது மொரின்யோ என வெவ்வேறு நிர்வாகிகள் வந் தாலும் தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்க அக்குழு தடுமாறி வரு கிறது. வெஸ்ட் ஹேம் யுனைடெட் குழுவிற்கு எதிரான நேற்றைய ஆட்டத்திலும் அந்தப் போக்கு தொடர்ந்தது.
ஆட்டத்தின் ஐந்தாம் நிமிடத் திலேயே ஃபெலிப் ஆண்டர்சன் மூலம் வந்த கோலால் முன்னி லைக்குச் சென்றது வெஸ்ட் ஹேம். முற்பாதி ஆட்டம் முடிய இரண்டு நிமிடங்களே இருந்த போது மேன்யூ ஆட்டக்காரர் விக்டர் லிண்டலோஃப் சொந்த கோல் போட, வெஸ்ட் ஹேம் வீரர்கள் முன்னிலை இரட்டிப்பான மகிழ்ச்சியுடன் இடைவேளைக்குச் சென்றனர். மாற்று வீரராக வந்த ரேஷ் ஃபர்ட் 71ஆம் நிமிடத்தில் ஒரு கோலடித்தபோதும் அடுத்த 3ஆம் நிமிடத்திலேயே வெஸ்ட் ஹேமின் அர்னாட்டோவிச் கோலடிக்க, ரேஷ்ஃபர்டின் கோலால் பலனில் லாமல் போனது. இதனால் இறுதி யில் 3=1 என்ற கோல் கணக்கில் மேன்யூ தோற்று பட்டியலில் மேலும் கீழிறங்கியதால் மொரின்யோ செய் வதறியாது திகைத்து வருகிறார்.

