வி.சுந்தரமூர்த்தியை வரவேற்கும் லாவோஸ் காற்பந்துக் குழு

வி.சுந்தரமூர்த்தியை வரவேற்கும் லாவோஸ் காற்பந்துக் குழு

1 mins read
6d4feffc-3192-4486-8a5a-22417292919e
-
Google News Preferred Icon

லாவோஸ் காற்பந்துக் குழுவின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் சிங்கப்பூர்க் குழுவின் முன்னாள் ஆட்டக்காரரும் பயிற்றுவிப்பாளருமான வி.சுந்தரமூர்த்தி, 53 (படம்). அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இவர் அக்குழுவிற்குப் பயிற்சி அளிப்பார். இந்தச் செய்தியை லாவோஸ் காற்பந்துக் கூட்டமைப்பின் தொழில்நுட்ப இயக்குநரும் சிங்கப்பூரருமான மைக் வோங் உறுதிப்படுத்தியுள்ளார். 2017ஆம் ஆண்டில் இருந்து அக்குழுவுடன் இணைந்து செயல்பட்டு வரும் வோங், சுந்தரத்தின் வருகையால் மகிழ்ச்சியடைந்துள்ளார். அடுத்த மாதம் 8ஆம் தேதி தொடங்கவிருக்கும் ஆசியான் காற்பந்துக் கூட்டமைப்பின் சுசுகி கிண்ணமே சுந்தரத் தின் லாவோஸ் கு ழு வு ட ன் இ ணை ந் து செயல்படவுள்ள முதல் போட்டித் தொடர். அ த ற் கு க் கிட்டத்தட்ட இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், விரைவில் அக்குழு வீரர்களுடன் பழகி, சூழ லைப் புரிந்துகொள்ள சுந்தரத்திற்கு உதவத் தயார் என்று மைக் வோங் தெரிவித்துள்ளார்.