சிங்கப்பூரின் காற்பந்தாட்ட நட்சத்திரம் அர்ஷாத் காமிஸ் 68 வயதில் காலமானார்

சிங்கப்பூரின் காற்பந்தாட்ட நட்சத்திரம் அர்ஷாத் காமிஸ் 68 வயதில் காலமானார்

1 mins read

சில்லிவாக் (கனடா): சிங்கப்பூரின் காற்பந்து நட்சத்திரமாகத் திகழ்ந்த 68 வயது அர்ஷாத் காமிஸ், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள தனது வீட்டில் காலமானார். 1977, 1980 ஆகிய ஆண்டுகளில் மலேசி யாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடை யே நடந்த ஆட்டங்களில் சிங் கப்பூர் வெற்றிக் கிண்ணத் தைத் தட்டிச்சென்றது. அந்த ஆட்டங் களில் தவிர்க்கமுடியாத ஆட்டக் காரராக திரு அர்ஷாத் இடம் பெற்றிருந்தார். அத்துடன் 'சிங்கப் பூர் ஆயுதப்படையின் விளை யாட் டுச் சங்கம்', 'சிங்கப் பூர் மலேஸ்' ஆகிய காற்பந்து அணிகளிலும் விளையாடி வந்தார். திரு அர்ஷாத் நேற்று முன் தினம் பிற்பகல் 1.45 மணியளவில் அவர் அமைதியாகக் காலமானார் என்று அவரது துணைவி திருமதி மில் காமிஸ் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.