அரங்கத்தில் ஆளும் இல்லை ஆட்டத்தில் கோலும் இல்லை

ரியெக்கா (குரோவே‌ஷியா): ரஷ்யா வில் இவ்வாண்டு ஜூன் மாதம் நடைபெற்ற உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடரின் அரை இறுதிச் சுற்றில் குரோ‌ஷியாவிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறிய இங்கிலாந்து குழு, அதற்குப் பழிதீர்க்க கிடைத்த அரிய வாய்ப்பை நழுவவிட்டது. ஐரோப்பாவில் முதன்முறையாக நேஷன்ஸ் லீக் போட்டிகள் நடை பெற்று வருகின்றன. லீக் 'ஏ'யில் நான்காம் பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து, குரோவே‌ஷியா அணிகள் மோதிய ஆட்டம் கோல் இன்றி சமநிலையில் முடிந்தது.

இந்த ஆட்டத்தில் தங்களுக்கு கிடைத்த கோல் வாய்ப்புகளை எல்லாம் இங்கிலாந்து ஆட்டக்கா ரர்கள் விரயமாக்கினர். அக்குழுவின் தலைவர் ஹேரி கேன், எரிக் டயர் ஆகியோர் உதைத்த பந்து கோல் கம்பத்தை எட்டிப் பார்த்துத் திரும்பியது. அதைத் தவிர்த்து, மான்செஸ்டர் யுனைடெட் குழுவிற்காக விளை யாடும் மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட், கோலைப் போட்டு ஆட்டத்தை வென்று தரக்கூடிய இரு எளிதான வாய்ப்புகளை வீணடித்தார். இந்த ஆட்டத்தில் குரோ வே‌ஷிய ஆட்டக்காரர்களும் அவ் வப்போது இங்கிலாந்தின் கோல் பகுதிக்கு முன்னேறினர். அவர் களில் ஒருவர், கடந்த உலகக் கிண்ணப் போட்டியில் தமது குழுவிற்காக சிறந்து விளங்கிய இவான் பெரிசிச். வலையை நோக்கி அவர் உதைத்த பந்தை இங்கிலாந்து கோல்காப்பாளர் ஜார்டன் பிக்ஃபர்ட் அற்புதமாகத் தடுத்தார்.

சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு கோல்கள் அடித்ததை அணித்தலைவர் ஈடன் ஹசார்ட் (நடுவில்), டிரைஸ் மெர்ட்டன்ஸ் (வலது) ஆகியோருடன் கொண்டாடும் பெல்ஜியத்தின் லுக்காகு. படம்: இபிஏ

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!