ஃபாண்டி: வாய்ப்புகளை கோல் ஆக்குவதில் மேம்பாடு தேவை

ஃபாண்டி: வாய்ப்புகளை கோல் ஆக்குவதில் மேம்பாடு தேவை

1 mins read
012a1faf-19cf-43ea-9232-7956c6f0309a
-

இடைக்கால பயிற்று விப்பாளர் ஃபாண்டி அகமதின்கீழ் சிங்கப் பூர் தேசிய காற்பந்துக் குழு இதுவரை விளையாடிய மூன்று ஆட் டங்களிலும் பிடியைத் தளர விடவில்லை. கிட்டத்தட்ட 2,000 ரசிகர்கள் முன்னிலையில் மழையில் சொக்கிய பீஷான் விளையாட்ட ரங்கில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற அனைத்துலக நட்பு முறை ஆட்டம் ஒன்றில் சிங்கப்பூர் குழு 2=0 எனும் கோல் கணக்கில் மங்கோலியாவை வென் றது. முன்னதாக, மொரீ‌ஷியஸ் குழுவுடன் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்ட சிங்கப்பூர் குழு, ஃபிஜி குழுவை 2=0 எனும் கோல் கணக்கில் வென் றிருந்தது.

மங்கோலியாவிற்கு எதிரான ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் கிடைத்த 'ஃப்ரீ கிக்' வாய்ப்பைப் பயன்படுத்தி கோலாக்கினார் அணித் தலைவர் ஹாரிஸ் ஹருன். ஒன்பது நிமிடங்கள் கழித்து, சிங்கப்பூரின் ஷாகிர் ஹம்சா மங்கோலியாவின் பெனால்டி எல்லையை நோக்கிப் பந்தை உதைத்துச் சென்று பின்னர் தடுமாறினாலும், அவர் பின்னே விரைந்து வந்த சக ஆட்டக்காரர் கேப்ரியல் குவாக் 25 மீட்டர் தொலைவிலிருந்து பந்தை உதைத்து கோலாக்கினார். இந்த வெற்றி தமக்கு மன நிறைவை அளித்தாலும் கிடைக் கும் வாய்ப்புகளை கோலாக மாற்றுவதில் மேம் பாடு காண வேண்டும் என்று ஃபாண்டி அகமது தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் வீரர் இக்‌ஷான் ஃபாண்டியின் கோல் முயற்சியைத் தடுக்கும் மங்கோலிய கோல்காப்பாளர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்