ஹைதராபாத்: இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன் னிங்சில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலை பெற இன்னும் நான்கு ஓட்டங்களே தேவைப்படுகின்றன. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், 2வது போட்டி நேற்று முன்தினம் தொடங் கியது. இந்தப் போட்டியில் வென் றாலோ அல்லது சமன் செய் தாலோ அல்லது முடிவு எட்டப் படாமல் 'டிரா' ஆனாலோ இந்திய அணி தொடரைக் கைப்பற்றி விடும். பூவா தலையாவில் வென்று முதலில் பந்தடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நாள் முடிவில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 295 ஓட்டங்களை எடுத்திருந்தது.
நேற்று இரண்டாம் நாளில் மேலும் 16 ஓட்டங்களைச் சேர்த்து 311 ஓட்டங்களுக்கு முதல் இன் னிங்சை முடித்துக்கொண்டது. 88 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ஆறு விக்கெட்டுகளைச் சாய்த்து தமது சிறப்பான பந்துவீச்சைப் பதிவு செய்தார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ். அடுத்து பந்தடிக்கத் தொடங் கிய இந்திய அணிக்கு ராகுல் இம்முறையும் ஏமாற்றமளித்தார். நான்கு ஓட்டங்களில் ஹோல்டர் பந்துவீச்சில் அவர் விக்கெட்டை இழந்தார்.
ஓட்டம் குவிக்கவேண்டிய நெருக்கடியில் இருந்த இந்திய அணியின் துணைத் தலைவர் ரகானே அரை சதமடித்தார். படம்: ஏஎஃப்பி

