ஜெர்மனிக்கு வரலாற்று தோல்வி

ஜெர்மனிக்கு வரலாற்று தோல்வி

1 mins read
3162b512-2620-404f-9461-947650ee8f96
-
Google News Preferred Icon

ஆம்ஸ்டர்டாம்: ஐரோப்பாவில் நடை பெற்று வரும் நேஷன்ஸ் லீக் போட்டியில் 3-=0 என்ற கோல் எண்ணிக்கையில் நெதர்லாந்திடம் தோற்று அதிர்ச்சியில் உறைந்து போனது ஜெர்மனி. காரணம் கடந்த 16 ஆண்டுகளில் நெதர்லாந்திடம் ஜெர்மனி பெற்ற முதல் தோல்வி இது. அது மட்டுமின்றி, மூன்று கோல் வித்தியாசத்தில் டச்சு அணியிடம் அது தோற்றதும் இதுவே முதல்முறை. மேலும், தொடர்ந்து மூன்று போட்டி களில் வெற்றிபெறத் தவறியது ஜெர்மனி காற்பந்து வரலாற்றில் இதுவே முதல்முறை. இப்படி ஒரு வரலாற்று தோல்வியை சற்றும் எதிர்பாராததால் வெட்கிப்போனது ஜெர்மனி. 2014 உலகக் கிண்ணத்தை வென்ற ஜெர்மனி இந்தத் தோல்வியால் குரூப் ஏ1 பட்டியலின் கீழ்வரிசைக்குச் சென் றது. கடந்த மூன்றரை மாதங்களில் ஜெர்மனிக்கு எந்தவோர் ஆட்டத்திலும் கோல் போட வாய்ப்பு கிட்டாதது அந்த அணிக்கு பெரிய வருத்தம். ஆகக் கடைசியாக உலகக் கிண்ண ஆட் டத்தில் சுவீடனுக்கு எதிராக டோனி குரூஸ் போட்டதுதான் அந்த அணியின் கடைசி கோல்.

அதன் பிறகு, 2-0 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவிடம் தோற்று உலகக் கிண்ண ஆட்டங் களிலிருந்து வெளியேறியது.

நெதர்லாந்தின் மத்திய திடல் ஆட்டக்காரர் ஜியோர்ஜினியோ விஜ்நால்டமும் (இடது) முன்வரிசை ஆட்டக்காரர் மெம்ஃபிஸ் டிபேயும் தங்களது அணியின் வெற்றியை இப்படி வித்தியாசமாகக் கொண்டாடினர். படம்: எஎஃப்பி