டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா

டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா

2 mins read
0515b3f3-d548-4520-b966-ba6ed60b1919
-

ஹைதராபாத்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது இந்தியா. இந்தியா = வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 311 ஓட்டங்கள் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 308 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கியது முதல் வெஸ்ட் இண்டீஸ் அணித் தலைவர் ஹோல்டர் தமது வேகப் பந்து மூலம் நெருக்கடி கொடுத்தார். இவரது 84வது ஓவரில் ரகானே (80), ஜடேஜா (0) ஆட்டம் இழந்தனர்.

59 ஓட்டங்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்ததால் 367 ஓட்டங்களில் இந்தியாவின் அனைத்து விக்கெட்டுகளும் வீழ்ந்தன. 56 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் 2வது இன்னிங்சைத் தொடங்கியது. உமேஷ் யாதவ் (4), ஜடேஜா (3) ஆகியோரின் அபார பந்துவீச்சால் வெஸ்ட் இண்டீஸ் 127 ஓட்டங்களில் சுருண் டது. இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் 4, ஜடேஜா 3, அஷ்வின் 2, குல்தீப் 1 என விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இந்தி யாவைவிட 71 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது வெஸ்ட் இண்டீஸ். இதனால் இந்தியாவிற்கு 72 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்தியாவின் லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பாக விளை யாடினார்கள். குறிப்பாக முதல் இன்னிங்சில் ஏமாற்றம் அடைந்த லோகேஷ் ராகுல் பொறுப் புடன் விளையாடினார். இருவரும் ஆட்டமிழக்காமல் வெற்றி இலக்கை எட்டினர். மேலும் இவ்விருவரும் தலா 33 ஓட்டங்கள் எடுத்தனர்.