இளையர் ஒலிம்பிக் ஹாக்கி: இந்தியாவைத் தோற்கடித்து தங்கம் வென்ற மலேசியா

இளையர் ஒலிம்பிக் ஹாக்கி: இந்தியாவைத் தோற்கடித்து தங்கம் வென்ற மலேசியா

1 mins read

பியூனஸ் அய்ரிஸ்: அர்ஜெண்டி னாவில் நடைபெற்று வரும் இளையர் ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான ஹாக்கிப் போட்டியில் மலேசியா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் மலேசியாவும் இந்தியாவும் மோதின. இதில் 4=2 எனும் கோல் கணக்கில் மலேசியா வாகை சூடியது. இளையர் ஒலிம்பிக் போட்டிக் கான ஹாக்கி போட்டிக்கு மலேசியா தகுதி பெற்றது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத் தக்கது. அக்குழுவின் நட்சத்திர வீரர் முகம்மது அகிமுல்லா அன்வார் எசூக் இரண்டு கோல்களைப் போட்டார்.

இந்தியாவின் இரண்டு கோல்களையும் அதன் அணித் தலைவர் விவேக் பிரசாத் ஆட்டத்தின் மூன்றாம் மற்றும் ஆறாம் நிமிடங்களில் போட்டார். முற்பாதி ஆட்டத்தில் இந்தியாவின் நிலை வலுவாக இருந்தது. ஆனால் பிற்பாதி ஆட்டத்தில் நிலைமை முற்றிலும் மாறியது. மலேசியாவின் அதிரடி ஆட்டம் இந்தியாவைக் கதிகலங்க வைத்தது.