சோர்சோ: நேஷன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் இத்தாலி வெற்றி பெற்றுள்ளது. நேற்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் போலந்தை 1-0 எனும் கோல் கணக்கில் அது வீழ்த்தியது. இது இத்தாலியின் பயிற்று விப்பாளர் என்கிற முறையில் ரொபெர்ட்டோ மன்சினிக்குக் கிடைத்திருக்கும் முதல் வெற்றி ஆகும். போலந்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு குழுக்களும் விட்டுக்கொடுக்காமல் விளை யாடின. இருப்பினும், ஆட்டத்தில் இத்தாலி ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் போலந்தின் தற்காப்பு அரண் பிடிவாதமாக நிற்க, இத்தாலியின் வீரர்களால் கோல் போட முடியவில்லை. இந்நிலையில், ஆட்டம் முடிய சில வினாடிகள் மட்டுமே எஞ்சியிருந்தபோது தற்காப்பு ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ பிராகி அனுப்பிய பந்து வலையைத் தீண்டியது.
"ஆட்டத்தில் நாங்கள் ஆதிக்கம் செலுத்தினோம். ஆட்டம் கோல் ஏதுமின்றி சம நிலையில் முடிந்திருந்தால் அது எங்களுக்குப் பெருத்த ஏமாற்றமாக இருந்திருக்கும். எங்கள் குழுவின் வீரர்கள் அனைவரும் தங்களால் முடிந்த அனைத்தையும் செய் கின்றனர். கடுமையான போட்டி நிலவிய ஆட்டத்தில் நாங்கள் வெற்றியைப் பதிவு செய்துள் ளோம்," என்றார் மன்சினி.
இத்தாலி அதன் அடுத்த ஆட்டத்தில் போர்ச்சுகலைச் சந்திக்கிறது. இந்தத் தோல்வியின் மூலம் போலந்து 'பி' நிலை லீக் போட்டிக்குத் தள்ளப்படுகிறது. மற்றோர் ஆட்டத்தில் துருக் கியை 2-0 எனும் கோல் கணக்கில் ரஷ்யா தோற்கடித்தது. ஆட்டத் தின் 20வது நிமிடத்திலும் 78வது நிமிடத்திலும் ரஷ்யா போட்ட கோல்கள் துருக்கியின் கதையை முடித்து வைத்தது. ரஷ்யா அதன் அடுத்த ஆட்டத்தில் சுவீடனை எதிர்கொள்கிறது.
ஆட்டம் முடிய சில வினாடிகள் மட்டுமே எஞ்சியிருந்தபோது இத்தாலி கோல் போட்டது. பந்து வலைக்குள் செல்வதைத் தடுக்க போலந்து கோல்காப்பாளர் பாய்ந்தார். ஆனால் அவரது முயற்சி தோல்வியில் முடிய, இத்தாலி வீரர்கள் கொண்டாட்டத்தில் மூழ்கினர். படம்: ராய்ட்டர்ஸ்

