டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: பிவி சிந்து அதிர்ச்சித் தோல்வி

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: பிவி சிந்து அதிர்ச்சித் தோல்வி

1 mins read
c75fe9ba-0bff-4ab6-9d9a-8e571d6a600d
-

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனைப் பிவி சிந்து முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து அதிர்ச்சி அளித்தார். டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் நேற்று நடைபெற்ற தொடக்கச் சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து அமெரிக்காவின் பெய்வென் சங்கை எதிர்கொண்டார். முதல் செட்டை 17-21 என பிவி சிந்து இழந்தார். 2வது செட்டை 21-16 என கைப்பற்றினார். வெற்றியைத் தீர்மானிக்கும் 3வது செட்டில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இறுதியில் அமெரிக்க வீராங்கனை 3வது செட்டை 21-18 என கைப்பற்றி வெற்றி பெற்றார். ஒலிம்பிக், ஆசிய விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிவி சிந்து முதல் சுற்றிலேயே தோல்வியடைந்தது அதிர்ச்சி அளித்துள்ளது. ஜப்பான் ஓபனில் 2வது சுற்றிலும் சீனா ஓபனில் காலிறுதியிலும் தோல்வியடைந்துள்ளார் சிந்து.