சிட்னி: ஜமைய்க்காவின் ஓட்டப் பந்தய வீரர் உசேன் போல்ட் கூடிய விரைவில் ஐரோப்பியக் காற்பந்து உலகை நோக்கிச் செல்லக்கூடும். மால்ட்டா நாட்டின் காற் பந்துக் குழு ஒன்று அவருக்கு ஈராண்டுகால காற்பந்து ஒப் பந்தத்தை வழங்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் போல்ட்டின் கையெழுத்தைப் பெறுவதன் மூலம் தாம் வரலாற்றைப் படைக்க விரும்புவதாக அந்தக் குழு கூறியது. 32 வய தாகும் போல்ட் ஆஸ்திரேலிய காற்பந்து லீக்கின் சென்ட்ரல் கோஸ்ட் மரினர்ஸ் குழுவில் தற்போது சோதனை முறையில் விளை யாடி வருகிறார். திடல்தடப் போட்டிகளில் இருந்து கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற அவர், தொழில்முறை ரீதியாக காற்பந்து வீரராக வேண்டும் என்ற தமது இளம் வயது கனவை நனவாக்கும் நோக்கில் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஆஸ்தி ரேலிய காற்பந்து அரங்கில் கால் பதித்தார்.
ஆஸ்திரேலிய லீக் காற்பந்து ஆட்டம் ஒன்றில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் உசேன் போல்ட். படம்: ராய்ட்டர்ஸ்

