பழிதீர்த்த இங்கிலாந்து

பழிதீர்த்த இங்கிலாந்து

2 mins read
c7d1b5a7-fdfe-4769-ade4-f48eb8942f5d
-

செவெல்: ஐரோப்பியக் காற்பந்துக் குழுக்கள் பொருதும் நேஷன்ஸ் லீக் போட்டியில் நேற்று இங்கி லாந்தும் ஸ்பெயினும் பொருதின. ரசிகர் பட்டாளம் நிறைந்திருந்த அரங்கில் மிகுந்த பரபரப்புடன் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து 3=2 எனும் கோல் கணக்கில் வென்றது. ஸ்பானிய மண்ணில் 31 ஆண்டு களில் இங்கிலாந்து சுவைத்த முதல் வெற்றி இது என் பதால் இங்கிலாந்து ஆட்டக்காரர்க ளும் ரசிகர்களும் இந்த வெற்றியைப் பெரிதும் கொண்டாடினர். இதன் மூலம் லீக் 'ஏ' நான்காம் பிரிவில் நான்கு புள்ளிகளுடன் இங்கிலாந்து இரண்டாம் இடத் திற்கு முன்னேறியுள்ளது. இங்கி லாந்தும் ஸ்பெயினும் தலா மூன்று ஆட்டங்கள் விளை யாடியுள்ளன. இவ்வேளையில், ஸ்பெயின் ஆறு புள்ளிகளுடன் முன்னிலை வகிக் கிறது.

குரோ‌ஷியா ஒரு புள்ளி யுடன் மூன்றாவது இடத்தில் உள் ளது. இங்கிலாந்தின் ரஹிம் ஸ்டர் லிங் இந்த ஆட்டத்தின் நாயகனாக திகழ்ந்தார். இங்கிலாந்து அடித்த மூன்று கோல்களில் இரண்டிற்கு அவர் சொந்தக்காரர். அதுவும், தேசிய குழுவிற்காக மூன்று ஆண்டுகளில் ஸ்டர்லிங் கோல் அடித்தது இதுவே முதன்முறை என்பதால் இந்த வெற்றி அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்தது. இங்கிலாந்து அடித்த மூன்று கோல்களும் ஆட்டத்தின் முதல் பாதியில் வந்தன. ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் ஸ்டர்லிங் குழு விற்காக முதல் கோலை அடித்தார். ஆட்டத்தின் 30வது நிமிடத்தில் அணித் தலைவர் ஹேரி கேன் அனுப்பிய பந்தை மான்செஸ்டர் யுனைடெட் ஆட்டக்காரர் மார்கஸ் ரேஷ்ஃபர்ட் லாவகமாக தட்டியதில் ஸ்பெயின் வலைக்குள் பந்து புகுந்த து.

இடைவேளை நெருங்கும் வேளையில் மறுபடியும் கேன் அனுப்பிய பந்தை சரியான பாதையில் உதைத்து ஸ்டர்லிங் கோலாக்கினார். இதன் மூலம் இடைவேளையின் போது 3=0 எனும் கோல் கணக்கில் இங்கிலாந்து அபாரமாக முன் னிலை வகித்தது. இடைவேளைக்குப் பிறகு புதுத் தெம்புடன் அரங்கிற்கு திரும்பினர் ஸ்பெயின் ஆட்டக்காரர்கள். அந்தக் குழு இரு கோல்களை அடித்து கோல் இடைவெளியைக் குறைத்தது.

இங்கிலாந்தின் வெற்றிக்கு வித்திட்ட ஆட்ட நாயகன் ரஹிம் ஸ்டர்லிங்கை வெகுவாகப் பாராட்டும் குழுவின் பயிற்றுவிப்பாளர் கேரத் சவுத்கேட் (நடுவில்). படம்: இபிஏ