ஜெர்மனி காற்பந்து அணிக்கு சோதனை மேல் சோதனை

ஜெர்மனி காற்பந்து அணிக்கு சோதனை மேல் சோதனை

2 mins read
19d42dc0-e386-4abd-91bb-1c4076c460c4
-

பாரிஸ்: உலகக் காற்பந்து வெற்றி யாளரான பிரான்ஸ் அணி 2=1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணியைத் தோற்கடித்தது. நேற்று முன்தினம் நடந்த அந்த ஆட் டத்தில் பிரான்ஸ் அணியின் அண்டோனியோ கிரீஸ்மன் இரண்டு கோல்களைப் போட்டு தனது அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார். ஜெர்மனி கடந்த வாரம் நெதர் லாந்துடன் பொருதிய ஆட்டத்தில் 3=0 என்ற கோல் கணக்கில் தோற் றது. அணியை வலுப்படுத்து வதற்கு சில மாற்றங்களுடன் துடிப்புடன் களம் இறங்கினாலும் லீக் 'ஏ' பிரிவு 1ல் நடந்த மூன்று ஆட்டங்களில் ஜெர்மனியால் ஒன்றில்கூட வெல்ல முடியவில்லை. இந்த மூன்று ஆட்டங்களிலும் பிரான்ஸ் ஏழு புள்ளிகள் பெற்று நெதர்லாந்தை முந்தியுள்ளது. ஜெர்மனியின் இந்தத் தோல்வி யால் அதன் தலைமைப் பயிற்றுநர் ஜோக்கிம் லோவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெர்மனியின் பயிற்றுநர் ஜோக்கிம் லோ, தனது அணி வீரர்களின் துணிச்சலை எண்ணிப் பெருமைப்படுவதாகக் கூறியுள்ளார்.

விறுவிறுப்பாகவும் வலுவுடனும் ஆட்டத்தைத் தொடங்கி ஆட்டத்தின் முற்பகு தியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது ஜெர்மனி. இருப்பினும் ஆட்டத்தின் பிற் பகுதியில் பிரான்ஸ் அணி சுதாரித்துக்கொண்டது. பிரான்ஸ் அணியினர் தங்கள் திறமையை அண்டோனியோ கிரீஸ்மன் மூலமாக வெளிப்படுத்தினர். அந்த வெளிப்பாடு பிரான்ஸுக்கு வெற்றியைத் தேடித்தந்தது. ஜெர்மனியின் தோல்வியால் ஏமாற்றமும் வருத்தமும் தம்மைத் தழுவினாலும் தமது ஆட்டக் காரர்கள் திறம்பட செயல்பட்டதாக அந்த அணியின் பயிற்றுநர் ஜோக் கிம் லோ, வெகுவாகப் பாராட்டி னார்,

துணிச்சலும் கட்டொழுங்கும் வாய்ந்த தமது அணி உலகிலேயே சிறந்த அணி என்று புகழாரம் சூட்டினார். தனது வீரர்களைப் பாராட்டிய லோ, அவர்களின் குறைகளையும் சுட்டிக்காட்டினார். அதேவேளையில் பிரான்ஸ் அணியின் வீரர்களையும் அவர் பாராட்டத் தவறவில்லை. பிரான்ஸ் வீரர்கள் ஒவ் வொருவரும் வியக் கத்தக்க வகை யில் தனித்திறன் வாய்ந்தவர்கள் என்று கூறினார். ஜெர்மனி அடுத்ததாக ரஷ்யாவுடன் நவம்பர் 15ஆம் தேதி நட்புமுறை ஆட்டத்தில் பொருத உள்ளது. அதற்கடுத்து நவம்பர் 19ல் நேஷன்ஸ் லீக் ஆட்டத்தில் நெதர்லாந்துடன் மோதுகிறது.

பாரிஸில் நேற்று முன்தினம் நடந்த பிரான்ஸ் = ஜெர்மனி அணிகள் பொருதிய நேஷன்ஸ் லீக் காற்பந்தாட்டத்தில் 2=1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வென்றது. ஆட்ட முடிவில் பிரான்ஸ் அணியின் பயிற்றுநர் டிடியர் டெஸ்சாம்ப்சும் ஜெர்மனி அணியின் பயிற்றுநர் ஜோக்கிம் லோவும் கைகுலுக்கிக் கொள்கின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்