அபுதாபி: பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான 2வது டெஸ்ட் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் 282 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளரான நேதன் லயன் ஆறு பந்தில் நான்கு விக்கெட்டு களை வீழ்த்தினார். இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் 80 ஆட்டங்களில் 314 விக்கெட்டுகள் வீழ்த்தி, அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ஆஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில் மிட்செல் ஜான்சனைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார். மிட்செல் ஜான்சன் 73 போட்டிகளில் விளையாடி 313 விக்கெட்டுகள் வீழ்த்தி ஐந்தாவது இடத்தில் உள்ளார். நேதன் லயன் 314 விக்கெட்டுகளுடன் 4வது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஜான்சனை முந்தினார் நேதன் லயன்
1 mins read

