லண்டன்: சென்ற பருவ எஃப்ஏ கிண்ணத்தை செல்சியிடம் பறி கொடுக்க நேர்ந்ததற்கு நாளைய இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத் தில் மான்செஸ்டர் யுனைடெட் பழிவாங்க முற்படும். மேன்யூவின் எஃப்ஏ கிண்ண வெற்றியை தனது கோலால் பறித்த ஹசார்ட் இப்பருவத்திலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், மேன்யூ வெற்றி பெற கடுமையாக போராட வேண்டியிருக் கும். கடந்த பருவத்தில் 12 கோல் களைப் போட்ட இவர், இப்பருவத் தில் அதற்குள் ஏழு கோல்களைப் போட்டு மற்ற குழுக்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்கிறார். இதற்கிடையே, புதிய விளை யாட்டாளர்களின் வரவு கைகொ டுக்காத நிலையில் பெரும் சரிவைச் சந்தித்து வரும் மேன்யூ இபிஎல் பட்டியலில் எட்டாம் இடத் தில் உள்ளது.
இதற்கு எந்த விளையாட்டா ளரை எப்படி பயன்படுத்த வேண் டும் என்பதில் மேன்யூ நிர்வாகி மொரின்யோவிற்கு தெளிவு இல்லை என்றும் தனக்கென ஒரு வியூகத்தை அவர் கொண்டிருக் காததும்தான் காரணம் என்று கூறப்படுகிறது. இதே மொரின்யோ செல்சியின் நிர்வாகியாக இருந்தபோது அக் குழு இரண்டு முறை பிரிமியர் லீக் பட்டம் வென்றது. ஆனால் மேன்யூ வின் நிர்வாகியாகப் பட்டம் வெல்ல அவர் கடுமையாக போராடுகிறார். மேன்யூ நிர்வாகியாக பொறுப் பேற்ற பிறகு, ஏழாவது முறையாக நாளை செல்சியை எதிர்கொள் கிறார் மொரின்யோ. முந்திய ஆறு ஆட்டங்களில் நான்கு முறை அவர் தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த பருவ எஃப்ஏ கிண்ண இறுதிப் போட்டியில் மேன்யூவின் தோல்விக்குக் காரணமான செல்சியின் ஹசார்ட் போட்ட கோல். படம்: ராய்ட்டர்ஸ்

