2வது டெஸ்ட் கிரிக்கெட்: பாகிஸ்தானின் பந்துவீச்சில் ஆட்டம் கண்டது ஆஸ்திரேலியா

2வது டெஸ்ட் கிரிக்கெட்: பாகிஸ்தானின் பந்துவீச்சில் ஆட்டம் கண்டது ஆஸ்திரேலியா

2 mins read
Google News Preferred Icon

அபுதாபி: ஆஸ்திரேலிய அணியை இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் 145 ஓட்டங்களுக்குச் சுருட்டியது பாகிஸ்தான். முதலில் பந்தடித்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 81 ஓவர்களில் 282 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஒரு கட்டத்தில் 57 ஓட்டங் களுக்கு 5 விக்கெட்களை இழந் திருந்த நிலையில் பஹர் ஸமான், சர்ப்ராஸ் அகமது இணை அபார மாக விளையாடி அணியை சரி வில் இருந்து மீட்டது.

பஹர் ஸமான், சர்ப்ராஸ் இருவரும் தலா 94 ஓட்டங்கள் குவித்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் லயன் 4, லபஸ்ஹக்னே 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸ் திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டு கள் இழப்புக்கு 20 ஓட்டங்கள் எடுத்தது. 2வது நாள் ஆட்டத்தை நேற்று முன்தினம் தொடர்ந்து விளை யாடிய ஆஸ்திரேலியா, பாகிஸ் தான் வீரர்களின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 50.4 ஓவர்களில் 145 ஓட்டங்களுக்குச் சுருண்டது.

அந்த அணியில் அதிகபட்சமாக ஆரோன் 39, ஸ்டார் 34 ஓட்டங்களும் எடுத்த னர். பாகிஸ்தான் அணி தரப்பில் அப்பாஸ் 5, பிலால் ஆசிப் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 137 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2வது இன் னிங்சை விளையாடிய பாகிஸ் தான் அணி ஆஸ்திரேலிய வீரர் களின் பந்துவீச்சை ஓட்டங்களாக குவித்தது. 2வது நாள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 144 ஓட் டங்கள் எடுத்த பாகிஸ்தான் நேற்று மூன்றாவது நாள் ஆட்டத் தின் உணவு இடைவேளை வரை 5 விக்கெட் இழப்பிற்கு 291 ஓட் டங்கள் எடுத்திருந்தது. நேற்று பாபர் அரை சதம் கடந்த நிலையில் பாகிஸ்தான் வலுவான நிலையை எட்டியது. இவ்வணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிந்தது.