கொழும்பு: மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது இங்கிலாந்து. மழையால் ஆட்டம் 21 ஓவராக குறைக்கப் பட்ட நிலையில், முதலில் பந்தடித்த இலங்கை அணி 21 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து, களமிறங்கிய இங்கிலாந்து அணி 18.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. எனவே, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது. ஒரு போட்டி வெற்றி, தோல்வியின்றி முடிந்தது.
மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து முன்னிலை
1 mins read

