முன்னாள் தேசிய திடல்தட விளையாட்டாளர் சி.குணாளனை கௌரவப்படுத்தும் வகையில் சிங்கப்பூர் விளையாட்டு மையம் இரு கலைப் படைப்புகளை நேற்று வெளியிட்டது. உள்ளூர் விளையாட்டாளர் ஒருவரை இந்த வகையில் கௌரவத்திருப்பது இதுவே முதன்முறை. அவை இரண்டும் காலாங்கில் உள்ள சிங்கப்பூர் விளையாட்டு அரும்பொருளகத்தில் நிரந்தரமாக காட்சிக்கு வைக்கப்படும். அஞ்சல் ஓட்டத்தின்போது கையில் வைத்து இருக்கும் சிறு தடி குணாளனின் வலது கையில் இருப்பது போன்றும் அவரது வலது கால் ஓடுவதற்குத் தயாராக இருக்கும் நிலை யிலும் அக்கலைப் படைப்புகளை வடிவமைத்து உள்ளார் உள்ளூர் கலைஞர் பேட் இயோக் குவான்.
வரும் செவ்வாய்க்கிழமை 76 வயதைப் பூர்த்தி செய்யும் திரு குணாளனுக்கு பிறந்தநாள் 'கேக்' கையும் பரிசாக அளித்தார் சிங்கப் பூர் திடல்தடச் சங்கத் தலைவர் டான் வெங் வை. தமக்கான இந்த கௌரவம் சற்று அதிக பட்சம்தான் என்றும் இவ்வளவு கவனத்திற்குத் தாம் தகுதியானவர் அல்ல என்றும் எப் போதும்போல தன்னடக்கத்துடன் கூறினார் திரு குணாளன். "ஒரு கருப்பொருளுடன் இந்த இரு கலைப் பொருட்களையும் உருவாக்கியுள்ளனர். அதற்கு முற்றிலும் பொருத்தமானவை என்றே நான் கருதுகிறேன். 'பேட்டன்' எனும் சிறு தடியைக் கைமாற்றுவதைப் போல அமைக்கப்பட்டு இருப் பது, அனுபவத்தை அல்லது அறிவை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதைப் போல இருக் கிறது. விளையாட்டில் பங்கேற்க ஆர்வம் உடை யவர்கள் தங்கள் கால்கள் மூலம் பேச வேண்டும் என்பதைக் குறிப்பிடும் வகையில், ஓடுவதற்கு ஆயத்தமாக இருக்கும் நிலையில் கால் வடி வமைக்கப்பட்டுள்ளது," என்றார் அவர்.
தமது வலது கையில் 'பேட்டன்' வைத்து இருப்பது போலவும் வலது கால் ஓடுவதற்குத் தயாரான நிலையிலும் வடிவமைக்கப்பட்டுள்ள கலைப் படைப்புகளுடன் திரு குணாளன். படம்: சிங்கப்பூர் விளையாட்டு மையம்

