அபுதாபி: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 373 ஓட்ட வித்தியாசத்தில் வென்றதன் மூலம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் 1=0- எனக் கைப்பற்றியது. முதல் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிய, 2வது போட்டி கடந்த 16ஆம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 282 ஓட்டங்களையும் ஆஸ்திரேலியா 145 ஓட்டங்களையும் எடுத்தன. பாபர் ஆஸம் 99 ஓட்டங்களை விளாச, ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 400 ஓட்டங்களை எடுத்த நிலையில் பாகிஸ்தான் 2வது இன்னிங்சை முடித்துக் கொண்டது. 538 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்குடன் 2வது இன்னிங்சை ஆடத் தொடங்கிய ஆஸ்திரேலியா 164 ஓட்டங்களில் சுருண்டது.
தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான்
1 mins read

