வெற்றியை இழந்த மேன்யூ

வெற்றியை இழந்த மேன்யூ

2 mins read
7af86905-cfdf-4700-92e1-7e5335c8d29b
-

லண்டன்: ஃபெர்குசன் நிர்வாகி யாக இருந்தபோது இங்கிலிஷ் காற்பந்து லீக்கில் அசைக்க முடி யாத சக்தியாகத் திகழ்ந்த மான் செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழு, அவருக்குப் பின் பல் பிடுங் கப்பட்ட பாம்புபோல் ஆகிவிட்டது. டேவிட் மோயஸ், லூயி வேன் ஹாலைத் தொடர்ந்து தற்போது ஜோசே மொரின்யோ என மூன்று நிர்வாகிகள் வந்தபின்னும் புள்ளிப் பட்டியலில் முதலிடம் என்பது எட்டாக்கனியாகிவிட்டது. கடந்த ஆட்டத்தில் நியூகாசல் யுனைடெட்டை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய அக்குழு, நடப்பு இபிஎல் பருவத்தில் இது வரை தோல்வியையே சந்தித்திராத செல்சி குழுவை அதன் சொந்த ஸ்டாம்ஃபர்ட் பிரிட்ஜ் அரங்கில் எதிர்கொண்டது. செல்சியின் நட்சத்திர ஆட்டக் காரராகத் திகழ்ந்து வரும் ஈடன் ஹசார்டின் அற்புதமான ஆட்டம் நேற்றும் தொடர்ந்தது. ஆட்டத்தின் 21ஆம் நிமிடத்தில் தலையால் முட்டி கோலடித்து செல்சிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார் ஜெர்மானிய ஆட்டக்கார ரான அன்டோனியோ ருடிகர்.

முற்பாதி ஆட்டம் 1-0 என செல்சிக்குச் சாதகமாக முடிந்தா லும் பிற்பாதியில் ஆட்டம் தலைகீழாக மாறியது. மேன்யூவின் நாய கனாக உருவெடுத்தார் ஆன்டனி மார்சியால். 55வது நிமிடத்திலும் 73வது நிமிடத்திலும் அவர் அடித்த இரு கோல்களால் தலை நிமிர்ந்தது மேன்யூ. மொரின்யோ நிர்வாகியாகப் பொறுப்பேற்றபின் மேன்யூ சார்பில் செல்சி அரங்கில் கோல் அடிக்கப்பட்டது நேற்றுதான் முதன்முறை. இருப்பினும், இடைநிறுத்தத்திற் காக ஆட்ட முடிவில் சேர்க்கப்பட்ட கூடுதல் நேரத்தில் கோலடித்து செல்சியைத் தோல்வியின் பிடியில் இருந்து விடுவித்தார் ராஸ் பார்க்லி.

நேற்றைய ஆட்டத்தில் கிட்டிய ஒரு புள்ளி மூலம் மொத்தம் 21 புள்ளிகளுடன் செல்சி பட்டியலின் முதலிடத்திற்கு முன்னேறியது. மாறாக இதுவரை ஒன்பது ஆட் டங்களில் ஆடி நான்கில் மட்டுமே வென்றுள்ள மேன்யூ 14 புள்ளி களுடன் பட்டியலின் எட்டாம் இடத்தில் உள்ளது (நேற்றைய மற்ற ஆட்டங்களுக்கு முந்தைய நிலவரம்). நிர்வாகி பதவியிலிருந்து நீக்கப் படமாட்டார் என மொரின்யோவிற்கு மேன்யூ நிர்வாகம் உறுதியளித் துள்ளபோதும் அவர் மீதான நெருக்கடி இன்னும் அகலவில்லை என்பதே உண்மை.

21ஆம் நிமிடத்தில் கோலடித்து செல்சிக்கு முன்னிலை பெற்றுத் தந்த உற்சாகத்தில் ஆர்ப்பரிக்கும் ருடிகர் (வலது), வில்லியன். படம்: இபிஏ