ஓய்வுபெற்றார் பிரவீண் குமார்

ஓய்வுபெற்றார் பிரவீண் குமார்

1 mins read

மீரட்: டெஸ்ட், ஒருநாள், டி20 என மூவகை கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியாவைப் பிரதிநிதித்துள்ள வேகப்பந்து வீச்சாளர் பிரவீண் குமார், 32, ஓர் ஆட்டக்காரராக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். அனைத்துலக அளவில் ஆறு டெஸ்ட், 68 ஒருநாள், பத்து டி20 போட்டிகளில் ஆடியிருக்கும் பிரவீண் மொத்தம் 112 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அடுத்ததாக பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராக வேண்டும் என்பது அவரது விருப்பம்.