பார்சிலோனா: செவ்வியா அணி யை வெற்றிகொண்ட போதிலும் பார்சிலோனாவால் அதனைக் கொண்டாட முடியவில்லை. காரணம் கீழே விழுந்ததால் லயனல் மெ-ஸ்ஸியின் வலது கையில் முறிவு ஏற்பட்டது. நு காம் திடலில் நேற்று முன்தினம் நடந்த ஸ்பெயின் லீக் ஆட்டத்தில் விறுவிறுப்புடன் ஆடிக்கொண்டிருந்த மெஸ்ஸி, போட்டி துவங்கிய ஒரு சில நிமி டங்களிலேயே லாவகமாக அனுப் பிய பந்து மூலம் கொட்டின்யோ கோல் அடித்தார். அடுத்த சிறிது நேரத்தில் வலப்பக்கம் இருந்து பந்தை கடத்திச் சென்ற மெஸ்ஸி, நான்கு வீரர்களைத் தாண்டி அட்டகாசமான கோல் ஒன்றைப் புகுத்தினார். அதன்மூலம் பார்சி லோனாவுக்கு 2-0 என்ற முன் னிலை கிடைத்தது.
ஆனால், அடுத்த சில நிமி டங்களிலேயே செவ்வியாவின் ஃபிரான்கோ வாஸ்குவேசுடன் மோதியதில் மெஸ்ஸி கிழே விழுந்தார். விழும்போது அவர் தமது வலது கையைத் தரையில் ஊன்றி யதில் காயம் ஏற்பட்டது. கீழே விழுந்து வலியால் துடித்தார் அவர். கையில் கட்டுப்போட்டுக் கொண்டு மீண்டும் விளையாட முயன்றார். ஆனால், வலி அதி கரித்துக்கொண்டேபோனதால் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்ட னர்.
காயமடைந்ததால் அடுத்த மூன்று வாரங்களுக்கு நடை பெறும் எந்த ஓர் ஆட்டத்திலும் மெஸ்ஸியால் விளையாட முடி யாது என்று தெரிவிக்கப்பட் டுள்ளது. இது குறித்து பார்சிலோனா கிளப் விடுத்துள்ள அறிக்கையில், "மெஸ்ஸிக்கு நடத்தப்பட்ட பரி சோதனைகளில் அவரது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டு உள்ளது. "இன்னும் மூன்று வாரங்களுக் காவது அவர் போட்டிகளில் விளையாடாமல் இருப்பார்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கீழே விழும்போது வலது கையை ஊன்றியதால் கை பிசகியது. அதனைத் தொடர்ந்து வலியால் துடித்த லயனல் மெஸ்லி. படம்: ராய்ட்டர்ஸ்

