மஸ்கட்: ஓமானில் நடைபெற்றுவரும் ஆசிய சாம்பியன்ஸ் கிண்ண ஹாக்கிப் போட்டியில் பாகிஸ்தானை இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த் தியது. ஐந்தாவது ஆசிய சாம்பி யன்ஸ் கிண்ணத்துக்கான ஆண்கள் ஹாக்கிப் போட்டி ஓமான் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, மலேசியா, பாகிஸ்தான், தென்கொரியா, ஜப்பான், ஓமன் ஆகிய அணிகள் பங் கேற்கின்றன. போட்டியை ஏற்று நடத்தும் ஓமானை முதல் ஆட்டத்தில் இந்திய அணி 11-0 என்ற கோல் கணக்கில் எளிதாக வென்றது. கடந்த வெள்ளிக் கிழமை மலேசியாவிடமும் ஓமான் தோல்வியுற்றது. இந்நிலையில், நேற்று முன்தினம் சுல்தான கபோஸ் திட லில் நடைபெற்ற லீக் ஆட்டத் தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின.
ஆட்டத்தின் தொடக்கத்தில் பாகிஸ்தான் அணி வீரர் இர்ஃபான் ஒரு கோல் அடித் தார். பின்னர் இந்திய அணியைச் சேர்ந்த மான்பிரித் பவார் 24ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்து ஆட்டத்தைச் சமநிலைக்குக் கொண்டு சென்றார். 33ஆவது நிமிடத்தில் மந்தீப் சிங் ஒரு கோலும் 42ஆவது நிமிடத்தில் தில்பிரித் ஒரு கோலும் அடித்து 3-1 என இந் திய அணியை முன்னிலைக்குக் கொண்டு சென்றனர். அதன் பிறகு ஆட்டம் முடி யும் வரை இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை. இதனால் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ் தானை வீழ்த்தியது.

