கண்டி: இலங்கையுடன் ஐந்து ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் இங்கிலாந்து ஆடி வருகிறது. முதல் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் அடுத்த இரு ஆட்டங்களில் இங்கிலாந்து வென்றது. நான்காவது ஒரு நாள் ஆட்டம் கண்டியில் சனிக்கிழமை நடைபெற்றது.
முதலில் ஆடிய இலங்கை 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 273 ஓட்டங்களைக் குவித்தது. மழை குறுக்கிட்டதால் இரண்டு விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்களை எடுத்த இங்கிலாந்து, டக்வொர்த் லீவிஸ் டிஎல்எஸ் முறையில் வென்றது.

