ஹடர்ஸ்ஃபீல்ட் (இங்கிலாந்து): சனிக்கிழமை பின்னிரவு நடை பெற்ற பிரிமியர் லீக் ஆட்டத்தில் 1=0 என்ற கோல் எண்ணிக்கையில் ஹடர்ஸ்ஃபீல்ட் டவுன் அணியை லிவர்பூல் வீழ்த்தியது. வெற்றி கோலைப் புகுத்தியவர் முகம்மது சாலா. கடந்த நான்கு ஆட்டங்களில் அவர் அடித்திருக்கும் முதல் கோல் இது. மேலும் இந்தப் பருவத்தில் அவர் அடித்திருக்கும் நான்காவது கோல் என்பதோடு ஒட்டுமொத்த இங்கிலிஷ் காற்பந்து ஆட்டங் களில் சாலாவின் ஐம்பதாவது கோல் இது. ஆட்டத்தின் தொடக்கத்தில் ஹடர்ஸ்ஃபீல்ட் அணியினர் கடும் போட்டி கொடுத்த போதிலும் 20வது நிமிடத்தில் சாலாவின் கோலை அவர்களால் தடுக்க இய லாமற்போனது.
ஹடர்ஸ்ஃபீல்ட் அணியின ருக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்க வில்லை என்றே கூறலாம். மத்தி திடல் ஆட்டக்காரர்களான ஜோனதன் ஹாக்கும் ஃபிலிப் பில் லிங்கும் கோலடிக்கும் வாய்ப்பு களைக் கோட்டைவிட்டனர். நீண்டதூரத்தில் இருந்து வலையை நோக்கி ஹோக் அடித்த பந்து கோல் கம்பத்தில் மோதி அவரது ஆர்வத்தை நொறுக்கியது. அதேபோல ஃப்ரீகிக் மூலம் பில்லிங் அடித்த பந்து கோல் கம்பத்தைத் தொடாமல் விலகிச் சென்றது.
ஹடர்ஸ்ஃபீல்ட் டவுன் அணியின் ஜெர்மன தற்காப்பு ஆட்டக்காரர் கிறிஸ் லோ (இடது) தட்டிப் பறிப்பதற்குள் பந்தைத் தூக்கி அடித்த முகம்மது சாலா. படம்: ஏஎஃப்பி

