மான்செஸ்டர்: பர்ன்லி அணியை 5-0 என்று எளிதாகப் பந்தாடிய தன் மூலம் பிரிமியர் லீக் பட்டியலின் முதலிடத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுள்ளது மான்செஸ்டர் சிட்டி. இது இந்தப் பருவத் தில் சிட்டிக்குக் கிடைத்திருக்கும் ஏழாவது வெற்றி. இரண்டு ஆட் டங்களில் மட்டுமே தோல்வி அடைந்ததால் முதலிடத்தை அதனிட மிருந்து தட்டிப் பறிப்பது கடினம் என்றாகிவிட்டது. ஒன்பது ஆட்டங் களில் அந்த அணி 26 கோல்களை அடித்துள்ளது. கடந்த பருவம் முழுவதும் சாதனை அளவாக 106 கோல்களைப் போட்டு அசத்தி இருந்தது சிட்டி.
வலுவான நிலையில் சிட்டி
1 mins read

