ரொனால்டோவை எதிர்கொள்ள தயாராகும் மேன்யூ

ரொனால்டோவை எதிர்கொள்ள தயாராகும் மேன்யூ

2 mins read
19a1f1f0-1aac-47c5-b6d7-a9d327be8254
-

கடந்த செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு மான்செஸ்டர் யுனைடெட் விளையாடிய காற்பந்து ஆட்டங்களில் அது வெற்றி பெற்றதில்லை. இந்த நிலையில், இன்று பின்னேரம் சாம்பியன்ஸ் லீக் ஆட்டமொன் றில் யுவென்டஸ் அணியுடன் மோதும் மேன்யூ, தனது முந்தைய நட்சத்திர ஆட்டக் காரரான ரொனால் டோவை எதிர் கொள்ளளத் தயாராகி வரு கிறது. கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆறு காற்பந்துப் பருவங்களில் மேன்யூவுக்காக விளையாடியது மட்டுமல்லாது, 2008ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் விருதைத் தட்டிச் செல்வதற்கும் உதவினார். அவருக்கு எதிராக பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு உள்ள போதிலும், அதை உதறித் தள்ளி விட்டு யுனைடெட் டுக்கு அவர் சிம்மசொப்பனமாக விளங்குவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே பந்தயப் பிடிப்பாளர்கள் யுவென்டஸ் அணியே வெற்றிபெறும் என்று ஒரே குரலில் கூற, அதை யுனை டெட் அணி தவிடுபொடியாக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அது அவ்வளவு எளிதல்ல என்பது அனைவரும் அறிந்ததே. காரணம் ஒருகால் ரொனால் டோவை கட்டிப் போட்டுவிட்டாலும், யுவென்டஸ் அணியில் மரியோ மன்சுகிச், போலோ டிபாலா போன்ற மற்ற வீரர்களைத் தன் வசம் வைத்துள்ள யுவென்டஸ் குழு, யுனைடெட் அணியை லேசில் விட்டுவிடாது என்று கூறு கின்றனர் காற்பந்து ரசிகர்கள். ஆனால், முன்னாள் லிவர்பூல் வீரரும் தற்பொழுது யுவென்டஸ் அணிக்காக விளையாடுபவருமான எம்ரே சான், காயம் காரணமாக களமிறக்கப்பட மாட்டார் என்ற செய்தி மேன்யூவுக்கு ஓரளவு ஆறுத லைத் தரும் என்று நம்பப்ப டுகிறது. இது ஒருபுறமிருக்க தாக்குதல் ஆட்டத்தில் யுனைடெட் வீரர்கள் ஒன்றும் சளைத்தவர்களல்லர் என்று கூறுவோரும் உண்டு.