ஐந்தாண்டுகளுக்குப் பின் கைவசமான முதல் பட்டம்

ஐந்தாண்டுகளுக்குப் பின் கைவசமான முதல் பட்டம்

1 mins read
4564d3f6-41f9-4f00-ba66-818604b99f2c
-
Google News Preferred Icon

ஆஸ்டின்: கடைசியாக 2013 ஆஸ்திரேலிய கிராண்ட் பிரீயில் வெற்றியாளர் பட்டம் வென்றிருந்த நிலையில் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக மீண்டும் ஒரு பந்தயத்தில் முதலாவதாக வந்து நெடுநாள் ஏக்கத்தைத் தீர்த்துக்கொண்டார் ஃபெராரி குழுவின் கிமி ராய்க்கொனன். அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் நடந்த கிராண்ட் பிரீயில் ராய்க்கொனன் பட்டம் வென்ற தால் இவ்வாண்டின் ஒட்டுமொத்த வெற்றியாளர் பட்டத்தை வெல்ல லூவிஸ் ஹேமில்டன் இன்னும் காத்திருக்க வேண்டியுள்ளது.

அமெரிக்க எஃப்1 பந்தயத்தை முதல் நிலையிலிருந்து தொடங் கியபோதும் ஹேமில்டனால் மூன்றாவதாகவே வர முடிந்தது. வெர்ஸ்டாப்பன் 2வது இடத்தை யும் செபாஸ்டியன் வெட்டல் 4வது இடத்தையும் பிடித்தனர். வெட்டலைவிட 70 புள்ளிகள் அதிகம் பெற்றுள்ள ஹேமில்டன் இவ்வார இறுதியில் மெக்சிகோ வில் நடக்கவுள்ள பந்தயத்தில் வென்று ஒட்டுமொத்த வெற்றியா ளர் பட்டத்தைக் கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க கிராண்ட் பிரீ வெற்றியாளர் ராய்க்கொனன். படம்: இபிஏ