பார்சிலோனா: பார்சிலோனா இன்று பின்னிரவில் அதன் கதா நாயகன் லயனல் மெஸ்ஸி இல்லாமல் களத்தில் இறங்குகிறது. சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் இன்டர் மிலானை அது சந்திக் கிறது. இருந்தபோதிலும் 'பி' பிரி வின் உச்சத்தில் இருக்கும் பார் சிலோனா வலுவான நிலையில் இருப்பது அந்த அணிக்கு ஆறு தலான அம்சம். கடந்த சனிக்கிழமை நடந்த ஆட்டத்தில் 4-2 என்ற கோல் எண்ணிக்கையில் செவ்வியாவை பார்சிலோனா வீழ்த்தியது.
ஆந்த ஆட்டத்தில் செவ்வியாவின் ஃபிராங்கோ வாஸ்குவேசுடன் மோதியதில் மெஸ்ஸி கீழே விழுந்தார். அப்போது தமது வலது கையை அவர் தரையில் ஊன் றியபோது வலியால் துடித்தார். பின்னர் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவரது வலது கையில் எலும்பு முறிவு ஏற் பட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அந்த ஆட்டத்தில் கிடைத்த வெற்றி பார்சிலோனாவுக்கு ஊக்கம் அளித்தது.
லா லிகா பட்டி யலில் 18 புள்ளிகளுடன் முதலிடத் தில் இருக்கும் பார்சிலோனாவின் ஆட்டக்காரர்கள் எந்த வகை தாக்குதலையும் சமாளிக்கும் திறனுடன் உள்ளார்கள். மெஸ்ஸி இல்லை என்பதற் காக இன்டர் மிலான் அலட்சியமாக இருந்துவிடாது. பார்சிலோ னாவை அதன் சொந்த மண் ணில் தோற்கடிக்க வேண்டும் என்ற வேட்கையுடன் அந்த அணியினர் காத்திருக்கின்றனர். மெஸ்ஸி இல்லாத பார்சிலோ னாவை இன்டர்மிலான் சந் திப்பது இது புதிதல்ல. ஏற் கெனவே ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் 2009 நவம் பரில் லா லலிகா போட்டியின் போதும் இதேபோன்ற சூழ்நிலை இருந்தது.
பயிற்சியில் தமது அணியினருக்கு ஆட்ட உத்திகளை விளக்கும் இன்டர் மிலான் நிர்வாகி லூசியானோ ஸ்பாலெட்டி.

