இன்று பின்னிரவு நடைபெறும் மற்றொரு சாம்பி யன்ஸ் லீட் ஆட்டத்தில் ரெட் ஸ்டார் பெல்கிரேடை லிவர்பூல் சந்திக்கிறது. கடந்த சனிக்கிழமை 1-0 என்ற கோல் எண் ணிக்கையில் ஹடர்ஸ்ஃபீல்டை வீழ்த்திய தெம்புடன் இருக்கிறது லிவர்பூல். நான்கு ஆட்டங்களில் ஏமாற்றத்தைச் சந்தித்து வந்த முகம்மது சாலா இந்த ஆட்டத்தில் மீண்டும் கோல் அடிக்கத் தொடங்கினார்.
அவர் அடித்த ஒரு கோலால் லிவர்பூல் வென்றதோடு பட்டியலின் இரண்டாம் இடத்திற்கு அது திரும்பியது. இன்று பின்னிரவு ஆன்ஃபீல்டில் நடைபெறும் ஆட்டம், லிவர்பூல் கட்டாயம் வெல்ல வேண்டிய ஐரோப்பிய போட்டியாக அமைந்துள்ளது. அதேநேரம் பிஎஸ்ஜியிடம் வெற்றியைப் பறி கொடுத்த ரெட் ஸ்டார், லிவர்பூலை வீழ்த்த புதிய உத்திகளை வகுத்துள்ளது. இருந்தபோதிலும் 4-1 என்ற கோல் எண் ணிக்கையில் லிவர்பூல் வாகைசூடும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

