லண்டன்: முறையற்ற நடத்தை காரணமாக செல்சி துணை நிர்வாகி மார்கோ இயனி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து காற்பந்து சங்கம் தெரிவித்து உள்ளது. கடந்த சனிக்கிழமை மான் செஸ்டர் யுனைடெட்டுனான ஆட் டத்தில் செல்சி 2-2 என்று சமநிலை கண்டது. அப்போது மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த இயனி, மான்செஸ்டர் யுனைடெட் அணியினர் முன்னால் அதன் நிர்வாகி மொரின்யோ ஆத்திரப்படும் அளவுக்கு நடந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
எரிச்சல் அடைந்த மொரின் யோ தமது இருக்கையைவிட்டு எழ முயன்றபோது பாதுகாவலர்கள் அவரைத் தடுத்து நிறுத்தினர். இயனியின் செயலுக்காக அவரும் செல்சி நிர்வாகி மௌரி ஸியோ செரியும் மன்னிப்புக் கேட்ட பின்னர் மொரின்யோ ஒர ளவு சமாதானம் அடைந்தார். இருந்தபோதிலும் இங்கிலிஷ் காற்பந்து ஆட்டங்களை நிர்வகிக் கும் இங்கிலாந்து காற்பந்து சங்கம் இச்சம்பவத்தில் நட வடிக்கை எடுக்க முடிவு செய்தது. அதனைத் தொடர்ந்து அறிக்கை ஒன்றை அது வெளி யிட்டது.

