சிங்கப்பூர்: ஞாயிற்றுக்கிழமை ஈசூன் திடலில் நடைபெற்ற சம்ப வத்தை போலிசும் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கமும் விசாரித்து வருகின்றன. ஜிம்கானா, காத் தோங் அணிகள் மோதிய தேசிய காற்பந்து லீக், டிவிசன் 1 ஆட் டத்தின்போது நடுவர் தாக்கப் பட்டதாகப் பார்வையாளர்கள் தெரிவித்தனர். 80வது நிமிடத்தில் ஜிம்கானா ஆட்டக்காரர் ஜுஃப்ரி ஹசா னுக்கு சிவப்பு அட்டை காட்டிய நடுவர் லி சி செங்கை சில ஆட்கள் சூழ்ந்து கொண்டதாகவும் அதன் பின்னர் அவரது கழுத்தில் அடி விழுந்ததாகவும் அவர்கள் கூறினர்.
அச்சம்பவத்தைத் தொடர்ந்து தௌஃபிக் தானா நடுவர் பொறுப்பை ஏற்றார். அதன்பிறகு ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது. நடுவர் லிம், 37, கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆட்டம் முடிந்த பின்னர் போலிஸ் வரவழைக்கப்பட்டது. இதற்கிடையே, விசாரணை முடிந்து ஆட்டக்காரர் மீது நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜிம்கானா அணியின் தலைவர் பேட்ரிக் ஃபிரான்சிஸ் கூறினார். ஜுஃப்ரி ஹாசான் ஜிம்கானா குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

