11 ஆண்டுகளில் ஆர்சனலுக்கு கிடைத்த தொடர் வெற்றி

11 ஆண்டுகளில் ஆர்சனலுக்கு கிடைத்த தொடர் வெற்றி

1 mins read
ebc6d64f-ca18-4e36-ba3f-c584109d9175
-

லண்டன்: திங்கட்கிழமை பின்னிரவு நடைபெற்ற இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் ஆர்சனல் 3-1 என்ற கோல் கணக்கில் லெஸ்டர் சிட்டியை வீழ்த்தியது. உனய் எமரி நிர்வாகியாக பொறுப்பேற்றது முதல் ஆர்சனல் கடந்த 10 ஆட்டங்களில் தொடர்ச் சியாக தனது வெற்றியைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது முதல் பாதியில் ஹெக்டர் பெலரின் போட்ட சொந்த கோலால் ஆர்சனல் 0-1 என்று பின்தங்கி இருந்தது. இருந்தபோதிலும் முதல் பாதி ஆட்டம் முடிவடைவதற்கு சிறிது நேரம் முன்னால் மெசூட் ஓசில் போட்ட கோல் மூலம் ஆர் சனல் 1-1 என ஆட்டத்தைச் சமப் படுத்தியது.

ஆர்சனல் அணிக்குத் தலைமை ஏற்றிருந்த ஓசில், லெஸ்டர் சிட்டிக்கு எதிராக மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்றுதான் சொல்லவேண்டும். சரிக்குச் சரி என்று தொடர்ந்து கொண்டு இருந்த ஆட்டத்தை இரண்டாம் பாதியில் திசைதிருப் பினார் யேரி எமரி அவ்பாமேயாங். அவர் அடித்த இரண்டு கோல்கள் ஆர்சனலை வெற்றிபெறச் செய் தன. அந்த இரு கோல்களுக்கும் மெசூட் ஒசில் பக்கபலமாக இருந் தார்.

இந்த வெற்றியின் மூலம் ஆர்சனல் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சிக்குச் சென்றனர். காரணம் 2007ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் ஆர்சனல் தொடர்ச் சியாக பத்து வெற்றிகளைக் குவித்துள்ளது.

லெஸ்டர் சிட்டியின் ஜானி எவான்ஸிடமிருந்து பந்தைத் தட்டிப் பறிக்கும் முயற்சியில் அவ்பாமேயாங் (இடது). படம்: இபிஏ