சென்னை அணி மீண்டும் தோல்வி

சென்னை அணி மீண்டும் தோல்வி

1 mins read

கவுகாத்தி: இந்தியன் சூப்பர் லீக் காற்பந்து (ஐஎஸ்எல்) தொடர் காற்பந்து ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி குழு மீண்டும் தோல்வியைத் தழுவியுள்ளது. கோல்கத்தாவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு வெற்றியாளரான சென்னையின் எப்.சி. அட்லெட்டிகோ டி கோல்கத்தாவுடன் மோதுகிறது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கத்திலேயே கோல்கத்தா அணி அடுத்தடுத்து இரண்டு கோல்கள் போட்டு சென்னையைத் திணறடித்தது.

3வது நிமிடத்தில் கோல்கத்தா வீரர் காலு உச்சே கோல் போட்டார். 13வது நிமிடத்தில் ஃப்ரீகிக் வாய்ப்பைப் பயன்படுத்தி கோல்கத்தா அணியின் ஜான்சன் பந்தை தலையால் முட்டி வலைக்குள் அனுப்பினார். 17வது நிமிடத்தில் சென்னை அணி வீரர் கார்லோஸ் சலோம் கோல் போட்டார். இறுதியில் கோல்கத்தா அணி 2-1 எனும் கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தியது. இதுவரை ஐந்து ஆட்டங்களில் விளையாடியுள்ள சென்னை, நான்கு ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது.