தொடரைக் கைப்பற்றிய பாகிஸ்தான்

தொடரைக் கைப்பற்றிய பாகிஸ்தான்

1 mins read

துபாய்: துபாயில் நடைபெற்ற இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2-0 எனத் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது. பாகிஸ் தான்-ஆஸ்திரேலியா இடை யிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அபு தாபியில் கடந்த 24ஆம் தேதி நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது ஆட்டம் நேற்று முன்தினம் துபாயில் நடைபெற்றது. பூவா தலையாவில் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்தடித்தது. தொடக்க வீரர் பாபர் ஆஸம் (45), முகம்மது ஹஃபீஸ் (40) ஆகி யோரின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் 148 ஓட்டங்கள் எடுத் தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது.

டார்சி ஷார்ட் (2), ஆரோன் ஃபிஞ்ச் (3), கிறிஸ் லின் (7) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் வெளியேறி னார்கள். மேக்ஸ்வெல் மட்டும் தாக்குப்பிடித்து 37 பந்துகளில் 52 ஓட்டங்கள் சேர்த்தார். மிட்செல் மார்ஷ் 21 ஓட்டங்களும் கூல்ட்டர்= நைல் 27 ஓட்டங்களும் அடிக்க ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 136 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.