மான்செஸ்டர் சிட்டி வீரர்களுக்கு நிர்வாகி எச்சரிக்கை

1 mins read

லண்டன்: வெம்பிளி விளையாட்டு அரங்கில் நாளை அதிகாலை நடக்கவுள்ள ஆட்டத்தில் டோட் டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவை எதிர்கொள்கிறது மான்செஸ்டர் சிட்டி. இந்நிலையில், தொடக்கத்தில் களமிறக்கப்படும் பதினொருவரில் இடம்பெறாவிடினும் அந்த ஏமாற் றத்தை வெளிக்காட்டாமல் பயிற் சியின்போது அனைத்து வீரர் களும் சரியான மனப்போக்குடன் இருக்க வேண்டும் என்றும் இல்லா விடில் பெரும் பிரச்சினையை எதிர் கொள்ள நேரிடும் என்றும் மேன் சிட்டி ஆட்டக்காரர்களுக்கு அதன் நிர்வாகி பெப் கார்டியோலா எச்ச ரித்துள்ளார்.