கடைசி நேர கோலால் சமனான ஆட்டம்

லெஸ்டர்: முற்பாதியிலேயே முன் னிலையை இழந்த நிலையில் ஆட்டம் முடிய ஒரு நிமிடமே இருந்தபோது வில்ஃபிரெட் இண்டிடி கோலடிக்க, வெஸ்ட் ஹேம் யுனைடெட் குழுவிற்கு எதிரான இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தை 1-=1 என்ற கோல் கணக்கில் லெஸ்டர் சிட்டி குழு சமன் செய்தது. மார்க்கோ அர்னாட்டோவிச் உட்பட முக்கிய ஆட்டக்காரர்கள் இல்லாத நிலையிலும் 30வது நிமிடத்தில் பராகுவே நாட்டின் ஃபேபியன் பல்புவெனா கோலடித்த தால் வெஸ்ட் ஹேம் குழு ஆட் டத்தை வென்று மூன்று புள்ளி களைக் கைப்பற்றும் என எதிர் பார்க்கப்பட்டது.

தான் தலையால் முட்டிய பந்து கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பிய போதும் மீண்டும் அதை முட்டி வெற்றிகரமாக வலைக்குள் தள்ளி னார் பல்புவெனா. ஆனாலும், பத்து நிமிடங்களுக் குப் பின் குழுத் தலைவர் மார்க் நோபல் சிவப்பு அட்டை பெற்று வெளியேறியது வெஸ்ட் ஹேமுக்குப் பின்னடைவாக அமைந்தது. இத னால் பாதி ஆட்ட நேரத்திற்கு மேல் அக்குழு பத்துப் பேருடன் விளையாடியது. இடைவேளைக்குப் பின் நட்சத் திர வீரரான ஜேமி வார்டியைக் களமிறக்கியது லெஸ்டர். 66வது நிமிடத்தில் இன்னோர் இங்கிலாந்து வீரரான ஹேரி மக்வாயர் தலையால் முட்டிய பந்து கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியதால் லெஸ்டர் தோல்வியின் பிடியில் இருந்து தப்ப முடியாது எனக் கரு தப்பட்டது.

ஆனாலும், கடைசித் தருணத்தில் 25 யார்டு தொலை விலிருந்து இண்டிடி உதைத்த பந்து பல்புவெனாவின் கால்களில் பட்டு வலைக்குள் புக, வெஸ்ட் ஹேமின் வெற்றி பறிபோனது. முன்னதாக நடந்த ஆட்டத்தில் மானே இரு கோல்களையும் சாலா, ஷக்கிரி ஆகியோர் ஆளுக்கு ஒரு கோலையும் அடிக்க, 4-1 என்ற கணக்கில் கார்டிஃப் சிட்டியை வென்று பட்டியலின் முதலிடத் திற்கு முன்னேறியது லிவர்பூல்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!