வெற்றி கிண்ணத்தைப் பகிர்ந்து கொண்ட இந்தியா, பாகிஸ்தான்

வெற்றி கிண்ணத்தைப் பகிர்ந்து கொண்ட இந்தியா, பாகிஸ்தான்

1 mins read
42aab547-03db-4b69-8126-7ebbac19b37d
-

மஸ்கட்: ஆசிய வெற்றியாளர் கிண்ண ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா, பாகிஸ்தான் அணிகள் தகுதி பெற்றிருந்தன. இப்போட்டி நேற்று முன்தினம் இரவு மஸ்கட்டில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அங்கு இடைவிடாது மழை பெய்ததால் போட்டி 30 நிமிடங்கள் தாமதமாகத் தொடங் கப்படும் என்று அறிவிக்கப் பட்டது. ஆனாலும் மழை நிற்காத தால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனவே, வெற்றியாளர் கிண் ணத்தை இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பகிர்ந்துகொண்டன. லீக் சுற்றில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வென்றது குறிப்பிடத்தக்கது.

இன்னும் இரு பந்தயங்கள் எஞ்சியுள்ள நிலையில் இவ்வாண்டின் ஒட்டுமொத்த வெற்றியாளர் பட்டத்தைக் கைப்பற்றிய மகிழ்ச்சியில் மெர்சிடிஸ் வீரர் லூவிஸ் ஹேமில்டன். படம்: ராய்ட்டர்ஸ்