மோசமான தோல்வியால் ஊசலாடும் பதவி

மோசமான தோல்வியால் ஊசலாடும் பதவி

2 mins read
7c068e1e-91f2-4df8-b8ec-ae2e5e82ba47
-

பார்சிலோனா: ஸ்பானிய லா லீகா காற்பந்துப் போட்டியில் பரம வைரி யான பார்சிலோனாவிடம் பலத்த அடிவாங்கியது ரியால் மட்ரிட். கடைசி ஐந்து போட்டிகளிலும் ரியால் வெற்றி பெறாத நிலையில், அதன் நிர்வாகி ஜுலன் லொபெடி கெயின் பதவி பறிபோகக்கூடும் என்று கூறப்படுகிறது. ரியால் மட்ரிட்டின் முன்னாள் நிர்வாகி ஸினடின் ஸிடான் எதிர் பாராமல் பதவி விலகியபின், அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டார் ஜுலன். முன்னதாக, ஸ்பெயின் தேசியக் காற்பந்து குழுவின் பயிற்றுவிப்பாள ராக இருந்த ஜுலன் உலகக் கிண்ணப் போட்டிக்கு இரண்டு நாட்கள் முன்னர் பதவி நீக்கப்பட் டார். ரியாலின் நிர்வாகியாக அவர் பொறுப்பேற்ற பிறகு சாம்பியன்ஸ் லீக்கில் ரோமாவை 3-0 என அக்குழு வீழ்த்தியது.

இதற்கிடையே, ரொனால்டோ வின் இடத்தை நிரப்பும் வகையில் யாரையும் ரியால் வாங்கவில்லை.

செவிய்யாவிடம் 3-0 என்ற கோல் வித்தியாசத்தில் அடைந்த தோல்வியைத் தொடர்ந்து அட்லெட் டிகோவிடம் சமநிலை, ஆல்வெஸ் குழுவிடம் 1-0 எனத் தோல்வி, 2-1 என லெவன்டே குழுவிடம் தோல்வி என கடந்த சில வாரங் களாக ரியால் குழுவால் வெற்றியை எட்ட முடியவில்லை.

இது 2001ஆம் ஆண்டு பருவத் திற்குப் பிறகு அக்குழுவின் மிக மோசமான தொடக்கமாகும். மொத்தத்தில் ரியாலின் நிர் வாகியாக தனது முதல் 14 ஆட்டங் களில் ஆறில் மட்டுமே வெற்றியை பதிவு செய்து உள்ளார் ஜுலன். மற்ற ஆட்டங்களில் இரண்டில் சம நிலையும் ஆறில் தோல்வியும் கண் டார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் பார்சிலோனாவிடமும் 5-1 என்ற கோல் கணக்கில் மோச மாகத் தோற்றது ரியால் மட்ரிட். பார்சிலோனாவின் கோல் கணக்கை கொட்டின்யோ 11வது நிமிடத்தில் தொடங்கி வைக்க அதை தனது ஹாட்ரிக் கோலால் நிரப்பினார் சுவாரெஸ். விடாலும் தன் பங்கிற்கு ஒரு கோலைப் போட, பார்சிலோனாவின் கோல் எண்ணிக்கை ஐந்தானது. 2018-10-30 06:00:00 +0800