நான்காமிடப் புதிருக்கு விடை = ராயுடு

நான்காமிடப் புதிருக்கு விடை = ராயுடு

2 mins read
71169d33-3443-4571-b10f-79ff6b6c05be
-

மும்பை: உலகக் கிண்ண கிரிக் கெட் போட்டிகளுக்கு இன்னும் ஓராண்டுகூட இல்லாத நிலையில் இந்திய அணியின் நான்காமிடத் திற்குத் தன்னைவிடப் பொருத்த மான ஆள் இல்லை என்பதைத் திட்டவட்டமாக நிரூபித்து வரு கிறார் அம்பதி ராயுடு. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் 80 பந்துகளில் ராயுடு சதமடித்தது, மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த் திக்கைவிட நான்காமிடத்திற்குத் தானே சிறந்தவன் என அவர் அறிவிக்கும் விதமாக அமைந்தது.

இந்த ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மாவும் 162 ஓட்டங்களை விளாச, இந்திய அணி 224 ஓட்ட வித்தியாசத்தில் பெரும் வெற்றியைப் பெற்றது. முதலில் பந்தடித்த இந்திய அணி 50 ஓவர்களில் ஐந்து விக் கெட் இழப்பிற்கு 377 ஓட்டங் களைக் குவித்தது. அடுத்துப் பந்தடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு கட்டத்தில் 77 ஓட்டங் களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. பின்வரிசை ஆட்டக்காரர்களை வைத்துக்கொண்டு அணித் தலைவர் ஜேசன் ஹோல்டர் (54*) சற்றுத் தாக்குப் பிடித்ததால், அந்த 153 ஓட்டங்களை எடுக்க முடிந்தது. 36.2 ஓவர்களிலேயே அந்த அணி எல்லா விக்கெட்டு களையும் இழந்து தோற்றது.

போட்டிக்குப் பின் பேசிய இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி, "கிடைத்த வாய்ப்பை இரு கைகளாலும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் ராயுடு. 2019 உலகக் கிண்ணப் போட்டிகள் வரை அவருக்கு நாங்கள் ஆதரவு அளிக்கவேண்டியது அவசியம்.

சூழலை அறிந்து, புத்திசாலித்தன மாக அவர் விளையாடுகிறார்," என்று புகழ்ந்து தள்ளினார். நான்காமிடப் புதிருக்குத் தீர்வு ராயுடுதான் என்றும் உலகக் கிண்ணப் போட்டிகள் வரை இனி அது பற்றி பேச்சு எழாது என்றும் குறிப்பிட்டார் ஆட்ட நாயகன் விருது வென்ற ரோகித் சர்மா.