ஆண் குழந்தைக்குத் தாயானார் சானியா

ஆண் குழந்தைக்குத் தாயானார் சானியா

1 mins read
Google News Preferred Icon

ஹைதராபாத்: இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நேற்றுக் காலை ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். இந்தத் தகவலை டுவிட்டர் மூலம் பகிர்ந்துகொண்ட அவரின் கணவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான சோயப் மாலிக், "மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறேன். தாயும் சேயும் நலமாக உள்ளனர்," எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சோயப்- சானியா தம்பதிக்கு வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளன. இவ்விருவரும் 2010ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் செய்துகொண்டனர்.