ஸ்பர்சை வீழ்த்தி மேன்சிட்டி முதலிடம்

ஸ்பர்சை வீழ்த்தி மேன்சிட்டி முதலிடம்

2 mins read
d6951b05-033a-433a-beff-b83701263b4c
-

லண்டன்: கடினமான வெம்பிளி காற்பந்துத் திடலில் வலிமையான டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவை 1=0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி குழு வெற்றி கொண்டது. ஆட்டத்தின் ஆறாவது நிமிடத் தில் ரியாத் மாரெஸ் அடித்த கோல் போட்டியின் முடிவைத் தீர்மானித்தது. இதையடுத்து, மேன்சிட்டி குழு கோல் வித்தியாச அடிப்படையில் இங்கிலிஷ் பிரி மியர் லீக் புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னே றியது. ரஹீம் ஸ்டெர்லிங்கிடம் இருந்து வந்த பந்தை மிக நேர்த்தியாக வலைக்குள் தள்ளி முன்னிலை பெற்றுத் தந்தார் மாரெஸ். அந்த முன்னிலையை மேன்சிட்டி குழு மிக எளிதாக கடைசி வரை தக்க வைத்தது.

ஸ்பர்ஸ் குழுவின் புதிய விளை யாட்டரங்கை முடிப்பதில் கால தாமதமாவதால் அதன் ரசிகர்கள் ஆத்திரத்தில் இருப்பதாகக் கூறப் படுகிறது. அதுவே, ஸ்பர்ஸ் குழுவின் தற்காலிக சொந்த அரங்கான வெம்பிளி அரங்கில் நடந்த நேற்றைய ஆட்டத்தைக் காண ரசிகர்கள் அதிக எண் ணிக்கையில் வராததற்குக் கார ணம் என்றும் சொல்லப்பட்டது. ஆட்டத்தைச் சமன்படுத்த ஸ்பர்சுக்கு ஒரு சில வாய்ப்புகள் கிட்டியபோதும் அவை கோலாக வில்லை. ஸ்பர்ஸ் நட்சத்திர ஆட்டக்காரர் ஹேரி கேன் கோலடிக்க அருமையான வாய்ப்பு கிடைத்தும் மேன்சிட்டி கோல் காப்பாளர் எடர்சன் அதை முறி அடித்தார்.

அதேபோல, கடைசி நேரத்தில் டெலி அலி மூலம் வந்த தங்கமான வாய்ப்பை எரிக் லமேலா வீணடித்தார். மறுமுனையில் மேன்சிட்டி தாக் குதல் ஆட்டக்காரர் செர்ஜியோ அகுவேரோவும் அவ்வப்போது ஸ்பர்ஸ் கோல்காப்பாளர் ஹியுகோ லோரிசுக்குச் சோதனையாகத் திகழ்ந்தார். இருமுறை வலையை நோக்கி அவர் உதைத்த பந்தை லோரிஸ் தடுத்தாட, கோல் வித்தி யாசம் மேலும் அதிகரிக்காமல் போனது.

ஸ்பர்சுக்கு எதிரான இபிஎல் ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டியின் ஒரே கோலை அடித்த அல்ஜீரிய ஆட்டக்காரர் ரியாத் மாரெஸ். படம்: இபிஏ