லீக் கிண்ணம்: காலிறுதியில் போர்ன்மத்

லீக் கிண்ணம்: காலிறுதியில் போர்ன்மத்

1 mins read
4e8b2125-ac8d-4f43-9fa0-b8fee796c2e3
-

போர்ன்மத்: லீ க் கிண்ணக் காற் பந்தின் காலிறுதிக்கு முன்னேறி யது இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழு வான போர்ன்மத். இத்தொடரின் நான்காவது சுற்று ஆட்டத்தில் நேற்று முன் தினம் நார்விச் குழுவை எதிர் கொண்டது போர்ன்மத். முதல் பாதி ஆட்டத்தில் நார்விச் தடுமாறிக்கொண்டிருந்த நேரத்தில், போர்ன்மத் குழுவிற் கான முதல் கோலைப் போட்டார் ஸ்டேனிஸ்லஸ். ஆனால் இடைவேளைக்குப் பிறகு முன்னேற்றம் கண்ட நார்விச் குழு ஆதிக்கம் செலுத்தி யது. அதனால், போர்ன்மத் குழு மேற்கொண்டு கோல் போட போராட வேண்டியிருந்தது. அக்குழுவின் ஹெர்னான்டஸ் 70வது நிமிடத்தில் அக்கோலைச் சமன் செய்தார். அதை அடுத்த இரண்டு நிமிடங்களிலேயே தகர்த்தெறிந் தார் ஸ்டீவ் குக். எனவே 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது போர்ன்மத்.

நார்விச் குழுவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது போர்ன்மத். படம்: ஏஎஃப்பி