]திருவனந்தபுரம்: இன்று நடைபெறவுள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டி யில் வெற்றி பெற்று வெஸ்ட் இண் டீசுக்கு எதிரான 12 ஆண்டுக்கால தொடர் வெற்றியைத் தக்க வைக்கும் ஆர்வத்தில் உள்ளது இந்திய அணி. கடந்த 2006ஆம் ஆண்டிற்குப் பிறகு வெஸ்ட் இண்டீசுக்கு எதி ராக நடந்த அனைத்து ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. எனவே தற்போதைய தொடரை யும் இந்திய அணிதான் வெல்லும் என்று கூறப்படுகிறது. ஆனால், ஏற்கெனவே நடந்து முடிந்த நான்கு ஆட்டங்களில் ஒரு போட்டியில் சமநிலை கண்ட வெஸ்ட் இண்டீஸ், இன்னோர் போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது.
எனவே தற்போதைய நிலையில் 2=1 என இந்தியா முன்னிலையில் இருந்தாலும் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறவுள்ள ஆட்டத் தின் முடிவுதான் தொடரின் வெற் றியை நிர்ணயிக்கும். வெஸ்ட் இண்டீஸ் எழுச்சி பெற்று வரும் நிலையில், தொடரை கைப்பற்றவும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான சாதனையைத் தொடரவும் வேண்டுமானால் கோஹ்லி, ராயுடு, ரோகித் சர்மாவை மட்டும் நம்பிக் கொண்டிருக்காமல் இந்திய வீரர் கள் அனைவரும் அபாரமாக விளையாட வேண்டியது அவசியம். இத்தொடரில் ஓட்டங்களைக் குவிக்க சிரமப்படும், டோனி ஒரு ஓட்டம் எடுத்தால் இந்தியாவுக்காக 10 ஆயிரம் ஓட்டத்தை எடுத்தவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார். அதே சமயம் அவர் 51 ஓட்டங் களை எடுத்தால் வெஸ்ட் இண் டீசுக்கு எதிராக ஆயிரம் ஓட்டங் களைத் தொடுவார்.

