வெஸ்ட் இண்டீசைப் பிழிந்தெடுத்த இந்தியா

வெஸ்ட் இண்டீசைப் பிழிந்தெடுத்த இந்தியா

2 mins read

திருவனந்தபுரம்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி நாள் அனைத்துலக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 3=1 என்று தொடரை இந்தியா வென்றுள்ளது. ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் கேரளத் தலைநகரம் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன் ஃபீல்ட் அனைத்துலக விளையாட்டரங் கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி பந்தடிப்பு, பந்துவீச்சு, களக்காப்பு என அனைத்திலும் சக்கைப்போடு போட்டது. வெஸ்ட் இண்டீஸ் 105 ஓட்டங்களை எடுத்திருந்தது. இது இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி யில் வெஸ்ட் இண்டீஸ் எடுத்திருக்கும் ஆகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கை ஆகும். வெஸ்ட் இண்டீசின் ஷே ஹோப் ஓட்டம் ஏதும் எடுக்காதபடி பும்ரா பார்த்துக்கொண்டார்.

ஹோப்பின் விக்கெட்டை அவர் கைப்பற்றினார். இந்தியப் பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா நான்கு விக்கெட்டுகளைச் சாய்த்தார். அவர் 9.5 ஓவர்களில் 34 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். பும்ரா, கலீல் அகமது ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டு களை வீழ்த்தினர். எளிதான இலக்கை விரைவில் தொட இந்திய வீரர்கள் மிகுந்த முனைப்புடன் பந்தடிக்கத் தொடங் கினர். இந்தியா 14.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 105 ஓட்டங்களை எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தி யாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 63 ஓட்டங்களுடனும் (37வது அரைசதத்தை அடித்தார் ரோகித் சர்மா) கோஹ்லி 33 ஓட்டங் களுடனும் ஆட்டமிழக்காமல் இருந் தனர். ‌ஷிகர் தவான் 6 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.